மோகன்லாலுடன் இணைந்து நடிக்கும் சிவகார்த்திகேயன் -புதிய பட அப்டேட்

நடிகர் சிவகார்த்திகேயன் தண்ணுடைய 24வது படமாக குட் நைட் டைரக்டருடன் நடிக்க உள்ளதாக கோலிவுட்டில் தகவல் வெளியாகியுள்ளது
நடிகர் சிவகார்த்திகேயன் விஜய் டிவியிலிருந்து சினிமாவுக்குள் அடியெடுத்து வைத்தார் .இவர் மெரினா ,எதிர்நீச்சல் ,வருத்தப்படாத வாலிபர் சங்கம் ,டான் ,வேலைக்காரன் ,மற்றும் சமீபத்தில் வெற்றிப்பெற்ற அமரன் படம் போன்ற பல்வேறு படங்களில் நடித்துள்ளார் .அவர் இப்போது சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி படத்திலும் ,மதறாசி படத்திலும் நடித்து வருகிறார்
இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளிவந்துள்ளது. அதாவது 'குட் நைட்' படத்தின் இயக்குனர் விநாயக் சந்திரசேகர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளதாகவும் இதன் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது
சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தில் மலையாள சூப்பர்ஸ்டார் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 16ஆம் தேதி தொடங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது