திரை வாழ்வில் 11 ஆண்டுகள்.. சிவகார்த்திகேயனை கொண்டாடும் ரசிகர்கள் !

sivakarthikeyan

நடிகர் சிவகார்த்திகேயனின் 11 ஆண்டுகள் நிறைவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர். பெண்கள் மற்றும் குழந்தைகளை கவர்வது என்பது சாதாரண விஷயமல்ல. ஆனால் நடிகர் விஜய்க்கு பிறகு சிவகார்த்திகேயன் தற்போது அந்த பாணியில் படங்களில் நடித்து வருகிறார்.  ரஜினி, கமல், விஜய், அஜித்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் தான் என்று சொல்லமளவிற்கு வளர்ந்துவிட்டார். 

sivakarthikeyan

விஜய் டிவியில் சாதாரண தொகுப்பாளராக பணியாற்றி வந்த சிவகார்த்திகேயன், பாண்டிராஜ் இயக்கிய ‘மெரினா’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதன்பிறகு அவர் நடிப்பில் வெளியான ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அடுத்தடுத்த அவரை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றது. 

நடிகராக இருந்தாலும் பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முக திறமைக் கொண்டு செயல்பட்டு கொண்டிருக்கிறார். தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் ‘மாவீரன்’ படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்நிலையில் சிவகார்த்திகேயன் திரைத்துறைக்கு வந்து 11 ஆண்டுகள் நிறைவுபெற்றுள்ளது. இதை கொண்டாடும் விதமாக இணையத்தளத்தில் #11yearsofprinceskism என்ற ஹேஷ்டாக் ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. அதேபோன்று மாவீரன் படக்குழு சார்பில் அசத்தலான போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. 

 

 

Share this story