ராணுவ அதிகாரியாகும் சிவகார்த்திகேயன்... புதிய படத்தின் செம்ம அப்டேட்

sk21

 சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த படத்தில் ராணுவ அதிகாரியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

நடிகர் சிவகார்த்திகேயன் தனது அடுத்தடுத்த படங்களில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில்  ‘மண்டேலா’ படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் ‘மாவீரன்’ படத்தில் நடித்து வருகிறார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது. 

sk21

இந்த படத்திற்கு பிறகு  ‘ரங்கூன்’ படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் படத்தில் அவர் நடிக்கவுள்ளார். சிவகார்த்திகேயனின் 21வது படமாக உருவாகும் இப்படத்தை கமலின் ராஜ் கமல் இன்டர்நேஷ்னல் மற்றும் சோனி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளது.

sk21

இந்த படத்தில் கதாநாயகியாக சாய் பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். முதற்கட்ட பணிகள் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ளது.  காஷ்மீரில் தொடங்கவுள்ள இந்த படத்தில் நடிகர் சிவகாரத்திகேயன், ராணுவ அதிகாரியாக நடிக்கிறார். ராணுவ கதைக்களம் கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க வட இந்தியாவில் நடைபெற உள்ளது. அதனால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு இப்போதே அதிகரிக்க தொடங்கியுள்ளது. 

 

Share this story