சிவகார்த்திகேயன் நடிக்கும் SK23 அப்டேட் குறித்து படக்குழு அறிவிப்பு...

SK23

அயலான் வெற்றியைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது, அமரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். மேலும், இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் SK23 படத்தில்  நடித்து வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக வித்யூத் ஜம்வால் நடிக்கிறார். எனவே ஆக்ஷன் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என ரசிகர்கள் ககுஷியில் உள்ளனர். மேலும் கதாநாயகியாக ருக்மிணி நடிக்க அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் 60 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளது எனவும் ஆகஸ்ட் இறுதிக்குள்  80 சதவீத படப்பிடிப்பு நிறைவடையும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் அக்டோபர் மாதத்துடன் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்து படம் 2025  பொங்கலுக்கு ரிலீசாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் படத்தின் முக்கிய அப்டேட் இன்று மாலை 5.49 மணியளவில் வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் தலைப்பு அல்லது போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர்.

Share this story