"காதல், பாசம், வீரம், புரட்சி கலந்திருக்கும் பராசக்தி" -சிவகார்த்திகேயன்

sivakarthikeyan
டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் மிகப் பிரமாண்டமாக தயாரித்திருக்கும் படம், ‘பராசக்தி’. இது சிவகார்த்திகேயன் நடிக்கும் 25வது படம், ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கும் 100வது படம், சுதா கொங்கரா இயக்கியுள்ளார். கடந்த 1960களின் வரலாற்று பின்னணியில், மாறுபட்ட களத்தில் தமிழின் பெருமை பேசும் படமாக உருவான இது, வரும் 10ம் தேதி உலகம் முழுக்க திரைக்கு வருகிறது. இன்பன் உதயநிதி வழங்க, ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிடுகிறது.
படம் குறித்து சிவகார்த்திகேயன் கூறியதாவது: சுதா கொங்கரா மேடம் சொன்னதால்தான் நடித்தேன். படத்துக்காக அவர் 5 வருடங்கள் கடுமையாக உழைத்தார். இதிலுள்ள கேரக்டர்களில் நடிப்பது எல்லோருக்குமே கஷ்டம்தான். அதை விரும்பி ஏற்றுக்கொண்டு உழைத்தோம். அதர்வா முரளிக்கும், எனக்கும் உண்மையான அண்ணன், தம்பி பாசம் இருக்கிறது. அவரது முதல் படத்துக்கான புரமோஷனுக்கு அவரது தந்தை முரளி வந்தார். நான் ஹோஸ்ட் செய்தேன். இதில் அதர்வாவுடன் நடித்ததை நினைத்து சந்தோஷப்படு கிறேன். ஸ்ரீலீலாவை தமிழ் சினிமாவுக்கு வரவேற்கிறேன். அவருடன் நான் ஆடியபோது, கடினமான சில மூவ்மெண்டு களை கொடுக்காததற்காக டான்ஸ் மாஸ்டருக்கு நன்றி.இப்படத்தில்  காதல், பாசம், வீரம், புரட்சி கலந்திருக்கும். இந்த பொங்கல் ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும். படத்தை பார்த்து ரசியுங்கள்.

Share this story