தீபாவளிக்கு வெளியாகிறது சிவகார்த்திகேயனின் 'அமரன்'
கமல்ஹாசனின் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் திரைப்படம் உருவாகி வருகிறது.
ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் புவன் அரோரா, ராகுல் போஸ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தமிழகத்தை சேர்ந்த மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனுக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த படம் எடுக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் பலரின் கவனத்தை பெற்றது. அதே சமயம், படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதியாக சித்தரித்துள்ளதாக கூறி எதிர்ப்பும் கிளம்பியது.
"There lived a man who never feigned to be a hero..."
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) July 17, 2024
Let’s celebrate our #Amaran - #MajorMukundVaradarajan this Diwali 🙏👍
A film by @Rajkumar_KP#AmaranDiwali@ikamalhaasan #Mahendran @anbariv @gvprakash @Sai_Pallavi92 @RKFI @SonyPicsIndia @sonypicsfilmsin @turmericmediaTM… pic.twitter.com/SmeInSTUJz
சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வரும் அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தை தொடர்ந்து ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துவருகிறார்.