சிவகார்த்திகேயன் - ஏ.ஆர் முருகதாஸ் படத்தின் படப்பிடிப்பு எப்போது ?... புதிய தகவல் !

sk with arm

சிவகார்த்திகேயன் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் இயக்குனர்களில் ஒருவர் ஏ.ஆர்.முருகதாஸ். அஜித்தின் ‘தீனா’ படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அவர், ரமணா, கஜினி, 7-ஆம் அறிவு, துப்பாக்கி, கத்தி, ஸ்பைடர், சர்கார், தர்பார் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். 

sk with arm

கடைசியாக ரஜினியை வைத்து அவர் இயக்கிய ‘தர்பார்’ திரைப்படம் போதிய வெற்றியை பெறவில்லை. அதனால் படம் இயக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில் சிவகார்த்திகேயனை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கவுள்ளது.

sk with arm

தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் ‘மாவீரன்’ படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன், விரைவில் அந்த படத்தை முடிக்கவுள்ளார். இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த இரண்டு படங்களை முடித்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் இணைவார் என்று கூறப்படுகிறது.  

 

Share this story