மீண்டும் போலீசாக நடிக்கும் சிவகார்த்திகேயன்.. ஏ.ஆர்.ரகுமான் படத்தின் புதிய அப்டேட்

sk21
 சிவகார்த்திகேயன் மீண்டும் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘மாவீரன்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்திற்கு பிறகு ‘ரங்கூன்’ படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.  

sk21

இந்த படத்திற்கு பிறகு பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படம் குறித்து ஏற்கனவே தகவல்கள் வெளியாகி வருகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மிருணாள் தாகூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கவுள்ளார். 

sk21

இந்நிலையில் இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். அந்த கதாபாத்திரம் மாஸாக இருக்கும் என கூறப்படுகிறது. விரைவில் இந்த படத்திற்காக புதிய தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

Share this story