சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன்... மீண்டும் இணைகிறதா 'டான்' கூட்டணி !

sivakarthikeyan

சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மீண்டும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

அறிமுக இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படம் 'டான்'. இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம் கடந்த ஆண்டு மே 13-ஆம் தேதி வெளியானது.  

sivakarthikeyan

அப்பா - மகன் பாசம் குறித்தும், கல்லூரி வாழ்க்கை குறித்தும் பேசிய இப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றது. குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் 100 கோடி ரூபாய் வசூல் சாதனை படைத்தது. இந்நிலையில் 'டான்' ‌ வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் மற்றும் சிபி சக்கரவர்த்தி கூட்டணி மீண்டும் இணையவுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. 

sivakarthikeyan

இதற்கிடையே 'மண்டேலா' படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் 'மாவீரன்' படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வந்தார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பை அவர் நிறைவு செய்தார். இந்த படத்தின் அடுத்து கமல் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் நடித்து வருகிறார். 'ரங்கூன்’ படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இப்படத்தை இயக்கி வருகிறார். அதேபோன்று சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'அயலான்' தீபாவளிக்கு வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

Share this story