காஷ்மீரில் தொடங்கியது 'SK 21' ஷூட்டிங்... இயக்குனர் கொடுத்த சூப்பர் அப்டேட்

sk 21

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் 'Sk 21' படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

'மாவீரன்'  திரைப்படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் 'எஸ்கே 21' திரைப்படம் உருவாக உள்ளது. சிவகார்த்திகேயனின் 21வது படமாக உருவாகும் இப்படத்தை கமலின் ராஜ் கமல் இன்டர்நேஷ்னல் மற்றும் சோனி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளன. ‘ரங்கூன்’ படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இந்த படத்தை இயக்கவுள்ளார். 

sk 21

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கவுள்ளார். இந்த படத்தில் நடிகர் சிவகாரத்திகேயன், ராணுவ அதிகாரியாக நடிக்கிறார். ராணுவ கதைக்களம் கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க வட இந்தியாவில் நடைபெற உள்ளது.

sk 21

இந்த படத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயன் சில பயிற்சிகளை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் இன்று தொடங்கியுள்ளது. இதை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி தெரிவித்துள்ளார். கடந்த மாதமே தொடங்கவிருந்த இந்த படப்பிடிப்பு பாதுகாப்பு பிரச்சனை காரணமாக தாமதமாக தொடங்கியுள்ளது.‌ அடுத்த வாரம் இந்த படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன் இணைவார் என்று தகவல் வெளியாகியுள்ளது. 

Share this story