'வீர தீர சூரன்' பார்க்க தியேட்டருக்கு வந்த சிவகார்த்திகேயன்... ரசிகர்கள் உற்சாகம்...

vikram

விக்ரம் நடித்துள்ள 'வீர தீர சூரன்' படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் சத்யம் திரையரங்கில் கண்டு களித்தார். 


விக்ரம் நடித்த "வீர தீர சூரன்" திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், டெல்லி உயர்நீதிமன்றம் விதித்த தடை காரணமாக இன்று வெளியாகுமா என்ற சந்தேகம் ஏற்பட்டது. மேலும், இன்று மதியம் இந்த படத்தை திரையிட நான்கு வாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டதாக செய்தி வெளியானது. இது விக்ரம் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.vikram

ஆனால், அதன் பின் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. இதை அடுத்து, வழக்கு வாபஸ் பெறப்பட்டதாகவும், இதனை அடுத்து இந்த படத்தை வெளியிட தடை இல்லை என நீதிமன்ற உத்தரவுக்கு பின்னர் உடனடியாக படத்தை ரிலீஸ் செய்வதற்கான அனைத்து பணிகளும் செய்யப்பட்டது. 

 


 

இந்த நிலையில்,இன்று மாலை முதல் "வீரதீர சூரன்" உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் முதல் நாள் முதல் காட்சியை பார்த்து ரசித்து கொண்டாடினர்.  இதனையடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் சத்யம் திரையரங்கில் ரசிகர்களுடன் கண்டு களித்தார். இதுவரை வெளியான தகவலின் படி, விக்ரம் நடித்த மாஸ் காட்சிகள் அட்டகாசமாக இருப்பதாகவும், ஒரு அதிரடி ஆக்ஷன் கமர்சியல் திரைப்படமாக இந்த படம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Share this story