‘அயலான்‘ ப்ரோமோஷனுக்காக வரும் ஏலியன்... தயாரிப்பாளர் சொன்ன ருசிகர தகவல் !

ayaalan

சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ படத்தின் ப்ரோமோஷனுக்காக ஏலியன் ஒன்று வரவிருப்பதாக தயாரிப்பாளர் சுவாரஸ்சிய தகவல் ஒன்றை கூறியுள்ளார். 

‘நேற்று, இன்று, நாளை’ படத்தின் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அயலான்’. சயின்ஸ் பிக்சன் படமாக வெளியாகவுள்ள இப்படத்தை 24 பிரேம் நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படம் குழந்தைகளுக்கான படமாக உருவாகி வருகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் கருணாகரன், இஷா கோபிகர், யோகிபாபு உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ayaalan

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இப்படத்தின் ஷூட்டிங் நிறைவுபெற்றது. ஆனால் நீண்ட நாட்களாக தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த தாமத்திற்கு காரணம் தெரியமால் ரசிகர்கள் தவித்து வந்தனர். அதேநேரம் இப்படம் வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வெளியாகும் என நேற்று திடீரென படக்குழுவினர் அறிவித்தனர். 

ayaalan

இந்நிலையில் ‘அயலான்’ படத்தின் தாமதத்திற்கான காரணம் குறித்து படத்தின் தயாரிப்பாளர் கே.ஜி.ஆர்.ரமேஷ் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளார். அதில், ‘அயலான்’ படத்தில் இடம்பெற்றுள்ள ஏலியன் பொம்மைக்காக மட்டும் ரூபாய் 2 கோடி செலவு செய்துள்ளோம். அதனுடைய அசைவு மட்டும் தான் கிராபிக்ஸ் செய்துள்ளோம். படத்தின் ப்ரோமோஷனுக்காக இந்த பொம்மையை அழைத்து வருவோம். 

ஹாலிவுட் படமான ‘ஈ.டி’ படத்தின் தழுவலாக இந்த படம் எடுக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளத்தில் தகவல் கசிந்துள்ளது. அது முற்றிலும் தவறானது. இந்த படத்தின் கதை முழுக்க முழுக்க வேறுப்பட்டதாக இருக்கும். இந்தியா சினிமாவில் அதிகபட்சமாக பிரம்மாஸ்திரா படத்திற்காக மட்டுமே 4 ஆயிரம் வி.எப்.எக்ஸ் காட்சிகள் பயன்படுத்தப்பட்டது. ஆனால் அதை மிஞ்சும் அளவிற்கு அயலான் படத்தில் 4500 வி.எப்.எக்ஸ் காட்சிகள் உள்ளது. அதனால் இந்த படம் நிச்சயம் விருந்து படைக்கும் என்று கூறினார். 


 

Share this story