நாளை காத்திருக்கும் சர்ப்ரைஸ்... 'அயலான்' படக்குழுவினர் மாஸ் அறிவிப்பு !

ayalaan

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'அயலான்' படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.  

 நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் நீண்ட கால உருவாகி வரும் திரைப்படம் ‘அயலான்’. இந்த படத்தை ‘நேற்று, இன்று, நாளை’ படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கி வருகிறார். சயின்ஸ் பிக்சன் படமாக வெளியாகவுள்ள இப்படத்தை 24 பிரேம் நிறுவனம் தயாரித்து வருகிறது.

ayalaan

இப்படம் குழந்தைகளுக்கான படமாக உருவாகி வருகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் கருணாகரன், இஷா கோபிகர், யோகிபாபு உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ayalaan

‘டான்’ படத்திற்கு முன்னரே தொடங்கப்பட்ட இப்படத்தின் பணிகள் நீண்ட நடைபெற்று வருகிறது. சயின்ஸ் பிக்சன் கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தில் அனிமோஷன் பணிகள் அதிகமாக இருப்பதால் பணிகள் தாமதமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாளை காலை 11.04 மணிக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அநேகமாக இது படத்தின் ரிலீஸ் குறித்து இருக்கலாம் என கூறப்படுகிறது. 

Share this story