ஒரு வழியாக ரிலீசாகும் சிவகார்த்திகேயன் படம்... எப்போ தெரியுமா ?

ayalaan

சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

‘பிரின்ஸ்‘ படத்திற்கு பிறகு ‘மாவீரன்’ படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ளார். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னரே படப்பிடிப்பு முடிந்த படம் ‘அயலான்’. இந்த படத்தை ‘நேற்று, இன்று, நாளை’ படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கியுள்ளார். சயின்ஸ் பிக்சன் படமாக வெளியாகவுள்ள இப்படத்தை 24 பிரேம் நிறுவனம் தயாரித்து வருகிறது.

ayalaan

இப்படத்தில் சிவகார்த்திகேனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் கருணாகரன், இஷா கோபிகர், யோகிபாபு உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர்.  ஏ.ஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படம் குழந்தைகளுக்கான படமாக உருவாகி வருகிறது. 

‘டான்’ படத்திற்கு முன்னரே தொடங்கப்பட்ட இப்படத்தின் பணிகள் நீண்ட நடைபெற்று வருகிறது. சயின்ஸ் பிக்சன் கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தில் அனிமோஷன் பணிகள் அதிகமாக இருப்பதால் பணிகள் தாமதமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தின் பணிகள் முடியும் தருவாயில் உள்ளதால் படத்தை வரும் தீபாவளிக்கு வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு வழியாக ‘அயலான்’ விரைவில் வெளியாகவிருப்பது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.  

Share this story