ரிலீசுக்கு தயாராகும் சிவகார்த்திகேயனின் ‘அயலான்’... புதிய அப்டேட்

ayalaan
 சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ படத்தின் ரிலீஸ் குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

டான், பிரின்ஸ் ஆகிய படங்களை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘அயலான்’. இந்த படத்தை ‘நேற்று, இன்று, நாளை’ படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கி வருகிறார். சயின்ஸ் பிக்சன் படமாக வெளியாகவுள்ள இப்படத்தை 24 பிரேம் நிறுவனம் தயாரித்து வருகிறது.

ayalaan

இப்படம் குழந்தைகளுக்கான படமாக உருவாகி வருகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் கருணாகரன், இஷா கோபிகர், யோகிபாபு உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர்.  ஏ.ஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

‘டான்’ படத்திற்கு முன்னரே தொடங்கப்பட்ட இப்படத்தின் பணிகள் நீண்ட நடைபெற்று வருகிறது. சயின்ஸ் பிக்சன் கதைக்களத்தில் உருவாகி வரும் இப்படத்தில் அனிமோஷன் பணிகள் அதிகமாக இருப்பதால் பணிகள் தாமதமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படம் அடுத்த ஆண்டு சம்மரில் வெளியாகும் என தகவல்கள் கசிந்துள்ளது.  

Share this story