‘பராசக்தி’ படக்குழு உடன் பிறந்தநாள் கொண்டாடிய சிவகார்த்திகேயன்...

sk

சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை பராசக்தி படக்குழு வெளியிட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் அமரன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு மதராஸி திரைப்படத்தை கைவசம் வைத்துள்ளார். அதே சமயம் இவர், சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி எனும் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் மதுரை, காரைக்குடி, சிதம்பரம் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ரவி மோகன், அதர்வா, ஶ்ரீலீலா மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில் படத்திலிருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.



இந்நிலையில் தான் கடந்த பிப்ரவரி 17ஆம் தேதி நடிகர் சிவகார்த்திகேயன் தனது 40வது பிறந்தநாளை கொண்டாடினார். அதன்படி பராசக்தி படப்பிடிப்பு தளத்தில் ரவி மோகன், அதர்வா, சுதா கொங்கரா ஆகியோருடன் இணைந்து தனது பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடியுள்ளார் சிவகார்த்திகேயன். இது தொடர்பான புகைப்படங்களை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளது. இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Share this story