குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய சிவகார்த்திகேயன்..

sk
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இன்று கோலாகலமான கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழர்களின் பாரம்பரியத்தை போற்றும் வகையில், வீடுகளில் வண்ணகோலமிட்டு, புதுப்பானையில் புத்தரிசி போட்டு பொங்கல் வைத்து ஒருவருக்கொருவர் அன்பை பரிமாறி பொங்கலை கொண்டாடி வருகின்றனர். இந்த நாளில் திரைப்பிரபலங்கள் பலர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டு அமரன் திரைப்படம் வெளியானது. அந்த படத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி என இருவரும் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர். இப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்று வசூலை அள்ளியது. இந்த நிலையில், இன்று பொங்கல் பண்டிகை என்பதால் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் சேர்ந்து பொங்கல் வைத்து. மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளார் சிவகார்த்திகேயன். அந்த போட்டோ தற்போது இணையத்தில் வெளியாகி டிரெண்டாகி உள்ளது. 


 

Share this story