‘மாவீரன்’ டப்பிங்கை நிறைவு செய்த சிவகார்த்திகேயன்... படக்குழு கொடுத்த சூப்பர் அப்டேட் !

maaveeran

‘மாவீரன்’ படத்தின் டப்பிங்கை நடிகர் சிவகார்த்திகேயன் நிறைவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

சிவகார்த்திகேயன் - மடோன் அஸ்வின் கூட்டணியில் மிரட்டலாக உருவாகி வருகிறது 'மாவீரன்'. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். இவர்களுடன் முன்னணி நடிகை சரிதா, இயக்குனர் மிஷ்கின், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

maaveeran

இந்த படம் வரும் ஜூன் 17-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்திற்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்து வருகிறார். 

இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுபெற்ற நிலையில் தற்போது தயாரிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து டப்பிங் பணிகளை நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த வாரம் தொடங்கியிருந்தார்.‌ இந்நிலையில் இப்படத்தின் டப்பிங் பணிகள் நடிகர் சிவகார்த்திகேயன் இன்று நிறைவு செய்தார். இதை படத் தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 

 


 

 

Share this story