சிபி சக்கரவர்த்தியுடன் மீண்டும் இணைவதை உறுதி செய்த சிவகார்த்திகேயன்...!

SK

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்துள்ள அமரன் திரைப்படம் கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியானது. கமல்ஹாசன் தயாரிப்பில் 100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் இதுவரை உலகம் முழுவதும் 185 கோடி வசூலை அடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அமரன் திரைப்படத்தை ஒரு பக்கம் ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் கொண்டாடி வரும் நிலையில், இந்தி ரசிகர்கள் மத்தியில் அந்த படத்தை புரமோட் செய்ய வேண்டும் என்பதற்காக சிவகார்த்திகேயன், சாய் பல்லவி, ராகுல் போஸ் மற்றும் ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்டோர் பிரஸ்மீட் ஒன்றில் கலந்துக் கொண்டனர்.


அப்போது, பேசிய சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த படங்கள் குறித்து பேசினார். அதில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வருவதாகவும்,  இப்போது இறுதிக்கட்ட பணிகள் நடந்துவருவதாகவும் கூறினார். அதன் பின் மீண்டும் டான் பட இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்தார். மேலும், இப்படம் ஒரு பொழுதுபோக்குப் படமாக இருக்கும் எனவும்  சிவகார்த்திகேயன் தெரிவித்தார். ஏற்கனவே சிபியும் சிவாவும் இணைந்த டான் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. இதன் காரணமாக இந்தப் படத்தின் மீதும் உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.

Share this story