மாறுபட்ட தோற்றத்தில் சிவகார்த்திகேயன்... தமிழ் புத்தாண்டையொட்டி ‘மாவீரன்‘ போஸ்டர் வெளியீடு !

Maaveeran

 தமிழ் புத்தாண்டையொட்டி சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘மாவீரன்’ படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 

சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகும் ‘மாவீரன்’ படத்திற்கு தமிழ் சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார். ‘மண்டேலா’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் மடோன் அஸ்வின் இப்படத்தை இயக்கி வருகிறார்.

Maaveeran

இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். இவர்களுடன் முன்னணி நடிகை சரிதா, இயக்குனர் மிஷ்கின், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில் தற்போது தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 

Maaveeran

ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட உள்ள இந்த படம் வரும் பக்ரீத் பண்டிகையையொட்டி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி இந்த படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் தமிழ் புத்தாண்டையொட்டி முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் மாறுப்பட்ட தோற்றத்தில் சிவகார்த்திகேயன் இருப்பது கவனம் ஈர்த்துள்ளது.

 

Share this story