சிவகார்த்திகேயன் துரோகம் செய்துவிட்டார்... இமான் பகிரங்க புகார்...

சிவகார்த்திகேயன் துரோகம் செய்துவிட்டார்... இமான் பகிரங்க புகார்...

நடிகர் சிவகார்த்திகேயன் வெளியே சொல்ல முடியாத அளவுக்கு துரோகத்தை செய்துவிட்டதாக இசையமைப்பாளர் டி.இமான் குற்றம் சாட்டியுள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன், நம்ம வீட்டுப் பிள்ளை, சீமராஜா உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசையமைப்பாளராக பணியாற்றியவர் டி.இமான். சிவகார்த்திகேயன் திரையுலகிற்கு அறிமுகமானது முதல் பல ஹிட் பாடல்களை இமான் வழங்கி உள்ளார். அதுமட்டுமின்றி, சிவகார்த்திகேயனை வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் பாடகராகவும் அறிமுகம் செய்து இருக்கிறார். இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக சிவகார்த்திகேயனும், இமானும் எந்த படங்களிலும் இணைந்து பணியாற்றவில்லை. இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த இமான், இந்த ஜென்மத்தில் அவருடன் இணைந்து பணியாற்றப் போவதில்லை என்றும், வெளியே சொல்ல முடியாத அளவு அவர் துரோகம் செய்துவிட்டார் என்றும் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், அவருடன் நெருங்கிப்பழகியதே தவறு எனவும் குறிப்பிட்டுள்ளார். 

 


இமைப்பாளர் இமானின் இந்தப் பேட்டி, தமிழ் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் இணையத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

Share this story