சிவகார்த்திகேயன் நடிக்கும் கேங்ஸ்டர் படம்-ஹீரோயின் யார் தெரியுமா ?

kayadu-lohar-3

சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த பட அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. தேசிய விருது பெற்ற ‘பார்க்கிங்’ பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குகிறார். இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கிறது. படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கியுள்ளது. இப்படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கவில்லை. இது சிவகார்த்திகேயனின் 27வது படம் என்பதால் தற்காலிகமாக ‘எஸ்.கே.27’ எனப் பெயரிட்டுள்ளனர். இப்படம் கல்லூரியில் நடக்கும் ஒரு கதைகளத்தை வைத்து உருவாக்கப்படுவதாக முன்பு தகவல் வெளியானது. ஆனால் தற்போது ஒரு கேங்ஸ்டர் படம் போல் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதில் கயாடு லோஹர் ஹீரோயினாக நடிக்கிறார்.

Share this story