சிக்சர் அடித்து அசத்தும் சிவகார்த்திகேயன்.. வீடியோ வைரல்

siva

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன் தற்போது அமரன் மற்றும் எஸ்.கே. 23 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார்.இதில் ராஜ்குமார் பெரிசாமி இயக்கியுள்ள அமரன் திரைப்படத்தை ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்கிறது. சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார். வருகிற அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி பண்டிகைக்கு வெளியாகிறது. இதனை அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துவிட்டனர். எஸ்.கே. 23 படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிவரும் இப்படத்தில் நடிகை ருக்மிணி வசந்த் நடித்து வருகிறார்.siva

நடிகர் சிவகார்த்திகேயனுக்கு மிகவும் பிடித்த விளையாட்டு கிரிக்கெட். இதை அவர் பல இடங்களில் கூறியிருக்கிறார். நேரம் கிடைக்கும் போதெல்லாம் தனது நண்பர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்த நிலையில், சிவகார்த்திகேயன் சமீபத்தில் தனது நண்பர்களுடன் இணைந்து விளையாடிய கிரிக்கெட் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதில் தோனி போல் சிக்சர் அடித்தும் அசத்தியுள்ளார்.



 

Share this story