அமரன் படத்தில் ஒரு குறிப்பிட்ட காட்சியில் நடிக்க மிகவும் கடினமாக இருந்தது: சிவகார்த்திகேயன்

sk
'அமரன்' படத்தில் நடிக்க மிகவும் கடினமாக இருந்த காட்சி குறித்து சிவகார்த்திகேயன் பகிர்ந்துள்ளார்.இயக்குனர் ராஜ்குமார் பெரிய சாமி இயக்கத்தில் கடந்த மாதம் 31-ம் தேதி தீபாவளியன்று வெளியான படம் அமரன். மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவான இப்படத்தில் முகுந்தாக சிவகார்த்திகேயனும், மனைவி இந்து ரெபேக்காவாக சாய்பல்லவியும் நடித்தனர். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் இதுவரை ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் கலந்துகொண்ட சிவகார்த்திகேயன், படத்தில் தனக்கு மிகவும் கடினமாக இருந்த காட்சி குறித்து பகிர்ந்துள்ளார். SKஇது குறித்து அவர்கூறுகையில்,  'எனக்கு படத்தில் மிகவும் கடினமாக இருந்த காட்சி எதுவென்றால் கிளைமாக்ஸில் வரும் ஆம்புலன்ஸ் காட்சிதான். அதற்குக் காரணம், என் அப்பாவுக்கும் அப்படித்தான் நடந்தது. அவரும் தனது கடமையைச் செய்து கொண்டிருக்கும்போதே உயிரிழந்தார். அவரது கடைசி தருணங்கள் ஆம்புலன்சுக்குள் இருந்தன. அந்த காட்சியை படமாக்கும் போது என் அப்பா அருகில் இருப்பது போல் உணர்ந்தேன்' என்றார். சிவகார்த்திகேயன், அடுத்ததாக ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் தற்காலிகமாக எஸ்.கே.23 என பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடிக்கிறார். இப்படத்தில், ருக்மணி வசந்த் கதாநாயகியாக நடிக்க, அனிருத் இசையமைக்கிறார்.

Share this story