‘தலைவர்171’ படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனா!- வாய்பிளக்க வைக்கும் செம தகவல்.

photo

ஜெயிலர் படத்தின் மூலமாக தரமான சம்பவத்தை பதிவு செய்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த தற்போது அவரது 170வது படத்திற்காக டி.ஜெ. ஞானவேலுடன் கைகோர்த்துள்ளார். தொடர்ந்து அவரது அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பு லோகேஷ் கனகராஜூக்கு கிடைத்துள்ளது. இந்த நிலையில் ‘தலைவரின் 171’வது படம் குறித்த செம தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது அந்த படத்தில் முன்னணி ஹீரோ நடிகர் ஒருவர் இணைய உள்ளாராம்.

photo

தலைவர் 171 படபணிகள் அடுத்த ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் துவங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த விவரம் ஒவ்வொன்றாக வெளிவருகிறது. அதன்படி தற்போது படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க நடிகர் சிவகார்த்திகேயனிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தகவல் வந்துள்ளது. தொடர்ந்து ‘எனக்கு ரஜினியிடன் பிடித்தது அவரது வில்லத்தனம் தான் அதனால் எனது படத்தில் அதனை எவ்வளவு முடியுமோ அவ்வளவு பயன்படுத்திக்கொள்வேன்’ என லோகேஷ் கூறியதும் வைரலாகி வருகிறது. இதனால் இந்த படத்தில் சூப்பர் ஸ்டாரை வேறு மாதிரி பார்ப்போம் என ரசிகர்களும் ஆவலாக உள்ளனர்.

Share this story