அமோகமாக நடக்கும் ‘மாவீரன்’ ப்ரீ பிசினஸ்.. சிவகார்த்திகேயன் படத்தின் புதிய அப்டேட்

சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படத்தின் தொலைக்காட்சி உரிமையை பிரபல நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
‘மண்டேலா’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘மாவீரன்’. இந்த படத்தில் கதாநாயகனாக நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்து வருகிறார். இவர்களுடன் முன்னணி நடிகை சரிதா, இயக்குனர் மிஷ்கின், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்து வருகிறார்.
இந்நிலையில் தொலைக்காட்சி உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உரிமை ஒரு பெரிய தொகைக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு ஓடிடி உரிமையை அமேசான் நிறுவனமும், ஆடியோ உரிமையை சரிகம பதநிசாவும் கைப்பற்றியுள்ளது. தற்போது வரை இந்த படம் ரிலீசுக்கு முன்னரே 83 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ‘பிரின்ஸ்’ படத்தின் தோல்விக்கு பிறகு சிவகார்த்திகேயனை ‘மாவீரன்‘ திரைப்படம் அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
Massive 83Cr non theatrical business for @Siva_Kartikeyan starrer #Maaveeran🔥💥💪
— Rajasekar (@sekartweets) March 11, 2023
Remember his last outing prince didn’t fare well at the box office yet there is a huge demand! pic.twitter.com/GqcyaQ8iye