ஓடிடியில் வெளியாகும் சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’.. எப்போது தெரியுமா ?
மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான ‘மாவீரன்’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கரும், வில்லனாக இயக்குனர் மிஷ்கினும் நடித்துள்ளனர். இவர்களுடன் யோகிபாபு, முன்னணி நடிகை சரிதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
ஃபேண்டஸி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன் மாறுப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தொடை நடுங்கியாக இருக்கும் ஒருவர் எப்படி மாவீரனாக மாறுகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை. ஒரு முக்கிய அரசியல் பிரச்சனையை காமெடி கலந்து கொடுத்திருப்பது அனைவரிமும் பாராட்டை பெற்று வருகிறது.
இந்த படம் 10 நாட்களில் 75 கோடி வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த படம் 100 கோடி வசூல் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் வரும் ஆகஸ்ட் 3வது வாரத்தில் அமேசான் ப்ரைம் ஓடிடித் தளத்தில் வெளியாகும் என தகவல் கசிந்துள்ளது.