கப்பல் செட்டில் படமாகும் ‘மாவீரன்’... ரொம்பவே மெனக்கெடும் சிவகார்த்திகேயன் !

sivakarthikeyan

சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தின் படப்பிடிப்பு குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

‘பிரின்ஸ்’ படத்தின் தோல்வியால் ‘மாவீரன்’ படத்தின் மீது மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன். இரவு பகல் பராமல் இந்த படத்திற்காக சில ரிஸ்க்காக விஷயங்களையும் செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வருகிறது. 

sivakarthikeyan

அந்த வகையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரி பகுதியில் நடைபெற்று வருகிறது. அதில் ஃபோட் செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படம் சிவகார்த்திகேயனின் சிறந்த படங்களில் ஒன்றாக இருக்கும் என கூறப்படுகிறது. அதனால் சிரமம் எடுத்து இந்த படத்திற்காக அவர் பணியாற்றி வருகிறார். 

sivakarthikeyan

சமீபத்தில் ‘லியோ’ படத்தை முடித்த மிஷ்கின், தற்போது ‘மாவீரன்‘ படத்தில் இணைந்துள்ளார். சிவகார்த்திகேயன் மற்றும் மிஷ்கின் இணைந்து நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இறுதிக்கட்ட க்ளைமேக்ஸ் காட்சிகள் எடுக்கப்படும் இந்த படப்பிடிப்பு வரும் மார்ச் 21-ஆம் தேதியுடன் நிறைவுபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட உள்ள இந்த படம் வரும் பக்ரீத் பண்டிகையையொட்டி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ‘மண்டேலா’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் மடோன் அஸ்வின் இப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்து வருகிறார். இவர்களுடன் முன்னணி நடிகை சரிதா, இயக்குனர் மிஷ்கின், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 


 

Share this story