சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ ரிலீஸ் தேதி மாற்றம்... காரணம் இதுதானா ?

maaveeran

 திட்டமிட்டதற்கு முன்னதாகவே சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் திரைப்படம் ‘மாவீரன்’. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். இவர்களுடன் முன்னணி நடிகை சரிதா, இயக்குனர் மிஷ்கின், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  

maaveeran

 ‘மண்டேலா’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் மடோன் அஸ்வின் இப்படத்தை இயக்கி வருகிறார். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்றுள்ள நிலையில் தற்போது தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. 

ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ள இந்த படம் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி திடீரென மாற்றப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் சொன்ன தேதிக்கு முன்னரே வரும் ஜூலை 14-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரஜினியின் ‘ஜெயிலர்’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த மாற்றம் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story