செம்ம குத்துப்போடும் சிவகார்த்திகேயன்... 'மாவீரன்' ஃப்ர்ஸ்ட் சிங்கிள் கிளிம்ஸ் !

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'மாவீரன்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டுள்ளது.
‘மண்டேலா’ இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘மாவீரன்’ திரைப்படம் உருவாகி வருகிறது. சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்து வருகிறார். கடந்த ஆண்டு தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.
இந்த படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் முன்னணி நடிகை சரிதா முக்கிய வேடத்திலும், இயக்குனர் மிஷ்கின், யோகிபாபு வில்லனாகவும் நடித்து வருகிறார். வித்தியாசமாக கதைக்களத்தில் உருவாகி இப்படத்தின் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடல் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோ முழு பாடலுக்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்த ஃப்ர்ஸ்ட் சிங்கிள் சிவகாரத்திகேயனின் பிறந்தநாளான வரும் 17-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Here is the glimpse of #Maaveeran first single #SceneAhSceneAh ??
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) February 15, 2023
A @bharathsankar12 musical ????@madonneashwin @AditiShankarofl @ShanthiTalkies @iamarunviswa @vidhu_ayyanna @philoedit @dineshmoffl @saregamasouth @LokeshJey @sivadigitalartpic.twitter.com/qNK7VVdQTw