பட்டையை கிளப்பும் ‘சீனா சீனா’ பாடல்.. சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் வெளியான ‘மாவீரன்’ அப்டேட்

maaveeran

சிவகார்த்திகேயன் பிறந்தநாளையொட்டி ‘மாவீரன்’ ஃப்ர்ஸ்ட் சிங்கிள் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. 

தென்னிந்தியாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருபவர் சிவகார்த்திகேயன். அவரின் நடிப்பில் உருவாகும் திரைப்படங்கள் அடுத்தடுத்து சூப்பர் ஹிட்டடித்து வரும் நிலையில் தற்போது மிரட்டலாக உருவாகி வருகிறது ‘மாவீரன்’. தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் இப்படம் உருவாகிறது. 

maaveeran

‘மண்டேலா’ இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தின் பணிகள் கடந்த ஆண்டு தொடங்கியது. சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்து வருகிறார். இந்த படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். இந்த படத்தில் முன்னணி நடிகை சரிதா முக்கிய வேடத்திலும், இயக்குனர் மிஷ்கின், யோகிபாபு வில்லனாகவும் நடித்து வருகிறார்.

கடந்த ஆண்டு தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் சிவகார்த்திகேயன் பிறந்தநாளையொட்டி இப்படத்தின் முதல் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. ‘சீனா சீனா’ என தொடங்கும் இந்த பாடல் பட்டையை கிளப்பியுள்ளது. இந்த பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 

Share this story