சிவகார்த்திகேயனுடன் எந்த பிரச்சனையும் இல்லை - 'மாவீரன்' இயக்குனர் விளக்கம் !

maveeran

சிவகார்த்திகேயன் 'மாவீரன்' திரைப்படம் திட்டமிட்டபடி படமாகி வருவதாக இயக்குனர் மடோன் அஸ்வின் தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவின் பிசியான ஹீரோவான சிவகார்த்திகேயன், ‘பிரின்ஸ்’ படத்திற்கு பிறகு ‘மாவீரன்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ‘மண்டேலா’ இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கி வருகிறார். பரத் ஷங்கர் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

maveeran

இந்த படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் இயக்குனர் மிஷ்கின், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இரண்டு மாதத்திற்கு முன்பு தொடங்கியது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக வந்த தகவலுக்கு இயக்குனர் மடோன் அஸ்வின் விளக்கமளித்துள்ளார். அதில் மாவீரன் படப்பிடிப்பு நிறுத்தப்பட இல்லை. சமூக வலைத்தளத்தில் வெளியான தகவல் அனைத்தும் வதந்தி. மழையால் படப்பிடிப்பு சில நாட்கள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் மீண்டும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது நான் படப்பிடிப்பில் இருக்கிறேன் என்று கூறியுள்ளார். 

 

Share this story