4 கோடி ரூபாய் சம்பள பாக்கி.. பிரபல தயாரிப்பாளருடன் நடிகர் சிவகார்த்திகேயன் சமரசம் !
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா எதிரான வழக்கில் சிவகார்த்திகேயனுடன் சமரசம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘மிஸ்டர் லோக்கல்’. பிரபல தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்தது. இந்த படத்திற்காக 15 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்ட நிலையில் இதுவரை 11 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. மீதம் உள்ள 4 கோடி ரூபாய் இதுவரை கொடுக்கப்படவில்லை.
இதையடுத்து தனது சம்பள பாக்கி 4 கோடியை தனக்கு கொடுக்கக்கோரி நடிகர் சிவகார்த்திகேயன் தரப்பில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீண்ட நாட்களாக சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது இந்த வழக்கில் இரு தரப்பும் சமரசம் செய்துக்கொள்ளவதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்ததது. இதற்கிடையே சிவகார்த்திகேயனுக்கு கொடுக்க வேண்டிய சம்பளம் பாக்கியை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா கொடுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.