விரைவில் தொடங்கும் சிவகார்த்திகேயன் அடுத்த படம்... புதிய அப்டேட் !

sivakarthikeyan

 சிவகார்த்திகேயனின் 21வது படம் குறித்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

‘பிரின்ஸ்’ படம் போதிய வெற்றியை பெறாத நிலையில் அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன் மிகவும் கவனமுடன் நடித்து வருகிறார். ‘மாவீரன்’ என்ற தலைப்பில் உருவாகும் இந்த படத்தை ‘மண்டேலா’ படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கி வருகிறார். இந்த படத்தில் அதிதி ஷங்கர் கதாநாயகியாக நடித்து வருகிறார். கடந்த ஆண்டு தொடங்கிய இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 

sivakarthikeyan

இந்த படத்திற்கு பிறகு கமலின் ராஜ் கமல் இன்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரிக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். சிவகார்த்திகேயனின் 21வது படமாக உருவாகும் இப்படத்தை  ‘ரங்கூன்’ படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக சாய் பல்லவி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

sivakarthikeyan

கடந்த ஆண்டு இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியானது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மார்ச் கடைசியில் அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பை தொடங்க படக்குழு முடிவு செய்துள்ளது. முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் தொடங்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Share this story