சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் ‘சீதாராமம்’ நடிகை... ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் புதிய அப்டேட்

sk

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தில் நடிகை மிருணாள் தாகூர் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாவீரன்’ படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துவிட்டார். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் உருவாகியுள்ள இந்த படம் அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. இந்த படத்தை முழுவதுமாக முடித்துவிட்டதால் அடுத்து ‘ரங்கூன்’ படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்கிறார். 

sk

கமலின் ராஜ் கமல் பிலிம்ஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். காமெடி கதைக்களங்களில் மட்டுமே நடித்து வரும் சிவகார்த்திகேயன், இந்த படத்தில் ஆக்‌ஷன் ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். 

sk

இந்த படத்தை முடித்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படம் குறித்து ஏற்கனவே தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மிருணாள் தாகூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ‘சீதாராமம்’ படத்தின் மூலம் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

Share this story