சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி! வெளியான அப்டேட்

சிவகார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி! வெளியான அப்டேட்

சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் 25வது படமாக உருவாக உள்ள திரைப்படத்திற்கு பராசக்தி என பெயரிடப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வருபவர் சிவகார்த்திகேயன். இறுதியாக இவர் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் 350 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. இந்நிலையில் தற்பொழுது ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் பெயரிடப்படாத தன்னுடைய 23வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் தன்னுடைய 24 ஆவது திரைப்படத்திலும் நடிக்க உள்ளார். 

இதற்கிடையில் சிவகார்த்திகேயனின் 25 வது திரைப்படம் தொடர்பான அறிவிப்பு ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இதனை பிரபல இயக்குனர் சுதா கொங்கரா இயக்குகிறார், சிவகார்த்திகேயனுக்குஜோடியாக தெலுங்கு நடிகை ஸ்ரீலிலா நடிக்கிறார். இதற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். வில்லனாக ரவி மோகன் நடிக்க உள்ளார் மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் அதர்வா நடிக்க உள்ளார் என்ற அறிவிப்பு மற்றும் பூஜை வீடியோக்கள் சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்தது நிலையில், இப்படத்திற்கு பராசக்தி என பெயரிடப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு படத்தின் டைட்டில் டீசர் உடன் விரைவில் வெளியாகும் எனவும் கூறப்படுகிறது.

Share this story