அடுத்த படத்திற்காக தயாராகும் சிவகார்த்திகேயன்.. அவரே கொடுத்த சூப்பர் அப்டேட் !

sk21

 தனது அடுத்த படத்திற்காக தயாராகி வருவதாக நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், சரியாக திட்டமிட்டு தனது படங்களில் நடித்து வருகிறார். மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாவீரன்’ படத்தில் நடித்து வந்த அவர், சமீபத்தில் அந்த படத்தின் படப்பிடிப்பை முடித்தார். விரைவில் இந்த படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. 

இந்த படத்திற்கு கமலின் ராஜ் கமல் இன்டர்நேஷ்னல் நிறுவனம் சார்பில் உருவாகும் படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளார். SK21 என்று தற்காலிகமாக அழைக்கப்படும் இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கவுள்ளார். இந்த படத்தின் கதாநாயகியாக சாய் பல்லவி நடிக்கிறார். 

sk21

ராணுவ தொடர்பான கதைக்களத்தை கொண்ட இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ராணுவ அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக லோகேஷன் பார்க்க படக்குழுவினர் காஷ்மீரில் முகாமிட்டுள்ளார். அதேநேரம் காஷ்மீர் சில நாட்கள் சிவகார்த்திகேயன் பயிற்சி எடுக்கவும் திட்டமிட்டுள்ளார். 

முழுக்க முழுக்க ராணுவம் கதைக்களம் கொண்ட இப்படம் 1960-ஆம் ஆண்டில் நடப்பது போன்று படமாக்கப்பட இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவிருக்கிறது. இதற்காக மும்பை சென்றுள்ள சிவகார்த்திகேயன், அங்கு சில நடிப்பு பயிற்சிகளை எடுத்து வருகிறார். இது குறித்து அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். 

 

Share this story