சகோதரி பிறந்தநாள் : கார் பரிசளித்து அசத்திய நடிகர் சிவகார்த்திகேயன்!
தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் stand-up காமெடியன் ஆகவும், மிமிக்கிரி செய்தும் தனக்கென ரசிகர் பட்டாளத்தை பெற்றவர் நடிகர் சிவகார்த்திகேயன். கலக்கப்போவது யாரு என்னும் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மனதில் இடம்பிடித்த இவர், சில குறும்படங்களில் நடித்தார். பின்னர், விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தனது பேச்சின் மூலம் மக்கள் முதல் பிரபலங்கள் வரை பரிச்சயம் பெற்றார்.
பின்னர், மெரினா, 3 உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த இவர், மனம் கொத்தி பறவை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். கேடி பில்லா கில்லாடி ரங்கா, எதிர் நீச்சல் என அடுத்தடுத்து இவர் நடித்த திரைப்படங்கள் வெற்றி பெறவே, முன்னணி நடிகர்களில் ஒருவராக தமிழ் திரையுலகில் வலம் வருகிறார். மேலும், நடிகராக மட்டுமல்லாது, தயாரிப்பாளர், பாடலாசிரியர் மற்றும் பாடகராகவும் திகழ்ந்து வருகிறார்.
Happy birthday to one of my biggest inspirations,
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) December 4, 2024
My dear Akka !
From completing MBBS after having a baby to earning your MD on merit with Gold medal at the age of 38, and now achieving FRCP at the age of 42, you’ve overcome all odds.
Appa will be really proud.
Happy birthday… pic.twitter.com/jzm1WAbdkr
தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து மிகப்பெரிய ஹிட் ஆனது. இந்நிலையில், சிவகார்த்திகேயன் தனது அக்காவின் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு ஒரு காரை பரிசளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், எனது மிகப்பெரிய இன்ஸ்பிரஷன்ஸ்-ல் ஒருவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள், குழந்தை பெற்ற பிறகு எம்பிபிஎஸ் படிப்பது முதல் 38 வயதில் தங்கப் பதக்கத்துடன் எம்டி பட்டம் பெறுவது வரை, இப்போது 42 வயதில் FRCPஐ அடைவது வரை, எல்லா முரண்பாடுகளையும் தாண்டிவிட்டீர்கள், அப்பா உண்மையிலேயே பெருமைப்படுவார், மீண்டும் ஒருமுறை பிறந்தநாள் வாழ்த்துக்கள், அன்புள்ள அத்தான், எப்போதும் அவளுடன் நின்றதற்கு நன்றி என நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.