இன்ஸ்டாகிராமில் மாஸ் காட்டிய சிவகார்த்திகேயன்!

sk

சிவகார்த்திகேயன் தனது மனைவி பிறந்தநாளுக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ அதிக பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது.நடிகர் சிவகார்த்திகேயன் பதிவிட்ட இன்ஸ்டாகிராம் வீடியோ தென்னிந்திய அளவில் அதிக பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த தீபாவளிக்கு வெளியான திரைப்படம் ‘அமரன்’.

இத்திரைப்படம் மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை தழுவி உருவாக்கப்பட்டது. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவாக்கப்பட்ட அமரன் திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். இத்திரைப்படத்தின் ப்ரோமோ வெளியானது முதல் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில், ’அமரன்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. பாக்ஸ் ஆபிஸில் 300 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.அமரன் திரைப்படத்தை அரசியல் தலைவர்கள் முதல் திரை பிரபலங்கள் பாராட்டினர். அமரன் திரைப்படம் எந்திரன், பிகில் உள்ளிட்ட பல திரைப்படங்களின் சாதனைகளை முறியடித்தது. மேலும் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி அமரன் திரைப்படம் இன்றளவும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி முறியடித்து வருகிறது.



இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தி பிறந்தநாளின் போது அவருக்கு சர்ப்ரைஸ் செய்வதற்காக ராணுவ உடையில் சென்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இதனை ரீல்ஸ் வீடியோவாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டார். இந்த வீடியோ வெளியானது முதல் சமூக வலைதளத்தில் பெரும் வைரலானது.இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் சிவகார்த்திகேயன் வெளியிட்ட வீடியோ 100 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இதன்மூலம் ஒரு தென்னிந்திய நடிகர் வெளியிட்ட ஒரிஜினல் கண்டன்ட் அதிக பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் தனது 23வது படத்தில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தற்போது நடித்து வருகிறார். இதனையடுத்து இயக்குநர்கள் சிபி சக்கரவர்த்தி, சுதா கொங்குரா ஆகியோரது இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this story