தீபாவளிக்கு ஏலியனுடன் வரும் சிவகார்த்திகேயன்... 'அயலான்' மாஸ் அறிவிப்பு !
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'அயலான்' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சயின்ஸ் பிக்ஷன் திரைப்படங்கள் என்றாலே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'அயலான்'. தமிழில் இதுபோன்ற திரைப்படங்கள் அரிதானது என்றாலும் முதல்முறையாக இதை சிவகார்த்திகேயன் முயற்சி செய்கிறார்.
இந்த படத்தை ‘நேற்று, இன்று, நாளை’ படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கி வருகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேனுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் கருணாகரன், இஷா கோபிகர், யோகிபாபு உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர் ரகுமான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
24 பிரேம் நிறுவனம் தயாரித்து வரும் இப்படம் நீண்ட நாட்களாக தயாரிப்பு பணியில் உள்ளது. இதற்கு காரணம் இந்த படம் முழுவதும் அனிமேஷன் காட்சிகள் நிறைந்ததாக இருக்கும். அதனால் பணிகளை முடிக்க தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் தீபாவளிக்கு இப்படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட நாட்களாக காத்திருந்த ரசிகர்களுக்கு இது உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இதற்கிடையே சிவகார்த்திகேயனின் 'மாவீரன்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி சுதந்திர தினத்தையொட்டி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.