'மாவீரன்' டப்பிங்கை தொடங்கிய சிவகார்த்திகேயன்... மாஸான வீடியோ வெளியீடு !

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'மாவீரன்' படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயனின் நடிப்பில் உருவாகும் ‘மாவீரன்’ படத்திற்கு தமிழ் சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ‘மண்டேலா’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் மடோன் அஸ்வின் இப்படத்தை இயக்கி வருகிறார். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். இவர்களுடன் முன்னணி நடிகை சரிதா, இயக்குனர் மிஷ்கின், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெற்று தற்போது தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ள இந்த படம் வரும் ஜூலை 17-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டப்பிங் பணியை நடிகர் சிவகார்த்திகேயன் இன்று தொடங்கியுள்ளார். இது குறித்து மாஸான வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
#Maaveeran Dubbing works started..🔥
— Laxmi Kanth (@iammoviebuff007) May 29, 2023
Gearing up for July 14 Release..⭐#Sivakarthikeyan | #AditiShankar | #MadonneAshwinpic.twitter.com/c8V1j8ROZt