சுதந்திர தினத்தையொட்டி வெளியாகும் 'மாவீரன்'.. மேக்கிங் வீடியோ வெளியீடு !
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'மாவீரன்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயனின் மாறுப்பட்ட நடிப்பில் உருவாகும் திரைப்படம் ‘மாவீரன்’. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். இவர்களுடன் முன்னணி நடிகை சரிதா, இயக்குனர் மிஷ்கின், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
‘மண்டேலா’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குனர் மடோன் அஸ்வின் இப்படத்தை இயக்கி வருகிறார். சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு பல கட்டங்களாக நடைபெற்று வந்தது. சமீபத்தில் இந்த படப்பிடிப்பு நிறைவுபெற்ற நிலையில் தற்போது தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிட உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வரும் ஆகஸ்ட் 11-ஆம் தேதி சுதந்திர தினத்தையொட்டி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி இப்படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
My dear brothers and sisters, see u in theatres #MaaveeranFromAugust11th 😊👍
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) April 22, 2023
வீரமே ஜெயம் 💪🔥#Maaveeran #Mahaveerudu#VeerameJeyam@madonneashwin @AditiShankarofl @DirectorMysskin @ShanthiTalkies @iamarunviswa @vidhu_ayyanna @philoedit @bharathsankar12 @iYogiBabu… pic.twitter.com/TRzMmRrXHM