மாவீரனாக ஜெயித்தாரா சிவகார்த்திகேயன்... ட்விட்டர் விமர்சனம் என்ன சொல்கிறது ?

maaveeran

 சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘மாவீரன்’ படத்தின் ட்விட்டர் விமர்சனம் வெளியாகியுள்ளது. 

மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் ‘மாவீரன்’. வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. இதுவரை பார்க்காத சிவகார்த்திகேயன் இந்த படத்தில் இருப்பதாக கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் ‘மாவீரன்‘ படம் குறித்து ட்விட்டரில் விமர்சனங்கள் பகிரப்பட்டு வருகிறது. அது என்ன என்பதை பார்க்கலாம். 

மாவீரன் கதை அனைவரையும் ரசிக்க வைக்கும். காமெடி மற்றும் விஜய் சேதுபதியின் குரல் சரியாக அமைந்துள்ளது. இரண்டாவது பாதியில் சில பின்னடைவுகள் இருந்தாலும், முதல் பாதியின் படம் அதை ஓவர்டேக் செய்துள்ளது. 


 

நடிகர் சிவகார்த்திகேயன் அற்புதமாக நடித்துள்ளார். இயக்குனர் மடோன் அஸ்வின் இந்த படத்திற்காக அழகான கதை மற்றும் திரைக்கதை எழுதியுள்ளார். யோகிபாபுவின் காமெடி காட்சிகள் ரசிக்க வைத்துள்ளது. விஜய் சேதுபதியின் குரல் மற்றும் சிவகார்த்திகேயனின் காட்சிகளின் காம்போ நன்றாக அமைந்துள்ளது. 


 

மிகவும் சுவாரஸ்சியமான முதல் பாதி கதை. வித்தியாசமான கதையில் படம் உருவாகியுள்ளது. சிவகார்த்திகேயன் சரியான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். யோகிபாபுவின் காமெடி காட்சிகள், இரண்டு பாடல்கள், காமிக் கதை ஆகியவை படத்தின் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது. 


மாவீரன் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. “நீ ஜெயிச்சிட்ட மாறா மொமண்ட்”- ல சிவகார்த்திகேயன் ரசிகர்கள் உள்ளனர். இந்த ஆண்டின் நல்ல காமெடி திரைப்படம் மாவீரன். முதல் பாதி மெதுவாகவும், இரண்டாவது பாதி பார்க்கலாம் என்று ரீதியிலும் செல்கிறது. க்ளைமாக்ஸ் நன்றாக இருக்கிறது. 


 

Share this story