சிவகார்த்திகேயனின் காதில் விழுந்த குரல் யாருடையது தெரியுமா ?.. உடைந்தது சஸ்பென்ஸ் !

maaveran

 சிவகார்த்திகேயனின் ‘மாவீரன்’ படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. 

மடோன் அஸ்வின் மற்றும் சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாவீரன்’. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். இவர்களுடன் முன்னணி நடிகை சரிதா, இயக்குனர் மிஷ்கின், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

maaveeran

சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு பரத் ஷங்கர் இசையமைத்துள்ளார். வரும் ஜூலை 14-ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகத்தில் வெளியிட உள்ளது. சமீபத்தில் இப்படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை நடைபெற்றது. 

maaveeran

 ‘மாவீரன்’ படத்தில் சஸ்பென்ஸான விஷயம் படக்குழுவினர் சீக்ரெட்டாக வைத்திருந்தனர். அது குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ‘மாவீரன்’ டிரெய்லரில், அரசியல்வாதிகளை பார்த்து பயப்படும் சிவகார்த்திகேயன், அடிக்கடி வானத்தை பார்ப்பார். அப்போது அங்கிருந்து ஒரு குரல் கேட்கிறது. அந்த குரலை கொடுத்தது ஒரு முன்னணி நடிகருடையது என்று கூறப்பட்டது. அந்த குரலை சிம்பு, தனுஷ், விஜய் சேதுபதி ஆகிய மூவரில் ஒருவர் கொடுத்துள்ளதாகவும் தகவல் வெளியானது. 

இந்நிலையில் அந்த குரலை கொடுத்தது நடிகர் விஜய் சேதுபதி தான் என்ற தகவல் கசிந்துள்ளது. ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் அந்த விஷயத்தை சஸ்பென்ஸாக வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 

Share this story