சூரிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்...!

soori

சூரி நடித்து வரும் 'மாமன்' படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு நடிகர் சிவகார்த்திகேயன்  சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்துள்ளார். 

கதையின் நாயகனாக தொடர்ந்து பயணித்து வரும் சூரி தற்போது மாமன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை விலங்கு வெப் சீரிஸ் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ், இயக்கி வருகிறார். இப்படத்தை 'கருடன்' படத் தயாரிப்பாளர் லார்க் ஸ்டுடியோஸ் சார்பில் கே. குமார் தயாரிக்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த டிசம்பர் மாதம் பூஜையுடன் தொடங்கியது. கதாநாயகியாக ஐஸ்வர்யா லெட்சுமி நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரங்களில் ராஜ்கிரண், சுவாசிகா, விஜி சந்திரசேகர், பால சரவணன், கீதா கைலாசம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் கடந்த ஜனவரி மாதம் வெளியாகியிருந்தது. கோடைக்கு படம் வெளியாகவுள்ளது. 


இந்த நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு சிவகார்த்திகேயன் சென்றுள்ளார். இதனை சூரி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்து சிவகார்த்திகேயனுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் அவர் படப்பிடிப்பு தளத்திற்கு வந்தது மிகுந்த மகிழ்ச்சி அளித்ததாக குறிப்பிட்டு அது தொடர்பான வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். 

Share this story