ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தின் பெயர் அறிவிப்பு..

ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்துக்கு ‘மதராஸி’ எனத் தலைப்பிட்டுள்ளனர்.
‘சிக்கந்தர்’ படத்தைத் தொடங்கும் முன்பே சிவகார்த்திகேயன் படத்தைத் தொடங்கினார் ஏ.ஆர்.முருகதாஸ். இப்படத்துக்கு பெயரிடப்படாமல் சுமார் 90% படப்பிடிப்பை முடித்துவிட்டார்கள். தற்போது சிவகார்த்திகேயன் பிறந்த நாளை முன்னிட்டு இதன் பெயருடன் கூடிய அறிமுக வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
இப்படத்துக்கு ‘மதராஸி’ எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு. இதில் வித்யூத் ஜாம்வால், பிஜு மேனன், ருக்மணி வசந்த், விக்ராந்த், ஷபீர் உள்ளிட்ட பலர் சிவகார்த்திகேயனுடன் நடித்துள்ளனர்.
Excited to present the title glimpse of our high-octane action entertainer, #Madharasi, with our favourite @ARMurugadoss sir and my dear @anirudhofficial - https://t.co/cQ5nfkEQY2 😊👍#SKxARM pic.twitter.com/NhwXkQNSbI
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) February 17, 2025
இசையமைப்பாளராக அனிருத், எடிட்டராக ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இப்படத்தினை ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இதன் இறுதிகட்டப் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. ‘பராசக்தி’ படப்பிடிப்புக்கு இடையே, ‘மதராஸி’ படப்பிடிப்பையும் இறுதிகட்டப் பணிகளையும் முடித்துக் கொடுக்கவுள்ளார் சிவகார்த்திகேயன். இந்தாண்டுக்கு தீபாவளிக்கு இப்படம் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.