கிரிக்கெட் வீரர் நடராஜன் பயோபிக் படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்

கிரிக்கெட் வீரர் நடராஜன் பயோபிக் படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன், தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் .மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட்டானது.

அதைத் தொடர்ந்து தனது 21வது படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கப்பட்டு காஷ்மீர் பகுதியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஜி வி பிரகாஷ் இசையிலும் இப்படம் உருவாகி வருகிறது. சிவகார்த்திகேயன் SK21-ல் ராணுவ அதிகாரியாக நடித்து வருகிறார்.

கிரிக்கெட் வீரர் நடராஜன் பயோபிக் படத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன்

இந்நிலையில், பயோபிக் படம் ஒன்றில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரபல கிரிக்கெட் நட்சத்திரம் நட்ராஜின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாகவும், இப்படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்குவதாகவும் கூறப்படுகிறது. விரைவில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story