எந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க ஆசைப்படுகிறார் தெரியுமா?

Sivakarthikeyan

நடிகர் சிவ கார்த்திகேயன் குறுகிய காலத்தில் எந்த வித சினிமா பின்புலமின்றி திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துள்ளார் .இவரின் சமீபத்திய பேட்டியில் ஒரு படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார் .அது எந்த படம் என்று நாம் இப்பதிவில் காணலாம் 
சிவகார்த்திகேயன், சமீபத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு, அங்கு பார்வையாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு வெளிப்படையாக பதிலளித்தார். அப்போது ஒருவர், ‘உங்களது படங்களில் எந்தப் படத்தின் 2ம் பாகத்தில் நடிக்க ஆசைப்படுகிறீர்கள்?’ என்று கேட்டார். அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், ‘ஒரு படத்தின் அடுத்தடுத்த பாகத்தில் நடிக்க மிகவும் பயமாக இருக்கிறது. காரணம், முதல் பாகத்ைத விட 2வது பாகத்தின் கதை எதிர்பாராததாகவும், அதைவிட சிறப்பாகவும் இருக்க வேண்டும். முதல் பாகம் பெற்றிருந்த வெற்றியை எந்தவிதத்திலும் 2வது பாகம் பாதிக்கக்கூடாது.ஆனால், ‘மாவீரன்’ படத்தின் 2வது பாகத்தில் நடிக்க நான் ஆசைப்படுகிறேன். காரணம், அந்த கதை மிகவும் தனித்துவமானது. எனவே, இப்படத்தின் 2வது பாகத்துக்கு முயற்சி செய்யலாம்’ என்றார். மடோன் அஷ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சரிதா, மிஷ்கின், அதிதி ஷங்கர் நடிப்பில் கடந்த 2023 ஜூலை 14ம் தேதி திரைக்கு வந்த படம், ‘மாவீரன்’. அருண் விஷ்வா தயாரிப்பில் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது

Share this story