‘ஜோ’ படக்குழுவை சந்தித்து வாழ்த்திய நடிகர் ‘சிவகார்த்திகேயன்’.

photo

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வரும் நடிகர்கள் மக்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ரியோ ராஜ் நடித்து சமீபத்தில் வெளியான படம் ஜோ. இந்த படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் படக்குழுவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். இது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

photo

விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில், இயக்குநர் ஹரிஹரன் ராம் இயக்கத்தில் வெளியான படம் ஜோ. இந்த படத்தில் நடிகர் ரியோ ராஜ் உடன் இணைந்து மாளவிகா மனோஜ், பாவ்யா த்ரிகா, அன்புதாசன் ஆகியோர் நடித்துள்ளனர். சித்து குமார் படத்திற்கு இசையமைத்துள்ளார். படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Share this story