கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் சிவகார்த்திகேயன்... புகைப்படங்கள் வைரல்...!

sk

கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் நடிகர் சிவகார்த்திகேயன் நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.


சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியான ‘அமரன்’ திரைப்படம் ரூ.300 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியது. இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘மதராஸி’ படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்தப் படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்து அவர் சுதா கொங்கரா இயக்கத்தில் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலாவடன் நடித்து வருகிறார். ‘பராசக்தி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரையரங்குகளில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.



 
இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “கண்ணூர், பினராயில் நடைபெற்ற பினராயிபெருமா கலை மற்றும் கலாச்சார விழாவில் அழைப்பின் பேரில் கலந்து கொண்டது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது.கேரளாவின் முதலமைச்சர் பினராயி விஜயன் அவர்கள், பொதுப்பணித்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் முஹம்மது ரியாஸ், சபாநாயகர் ஷம்சீர், அன்புக்குரிய ஆசிஃப் அலி, மற்றும் புகழ்பெற்ற பத்திரிகையாளர் ‘தி இந்து’ ராம் அவர்களுடன் மேடையைப் பகிர்ந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. கேரள மக்களின் அன்பும், அரவணைப்பும் என்னை மிகவும் நெகிழ்ச்சியடையச் செய்தது. இந்த மறக்க முடியாத நினைவுக்களுக்கு மிக்க நன்றி” எனத் தெரிவித்துள்ளார்.


 

Share this story